பொதுவாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிகமாக இருக்கும். இதனால், பொதுமக்கள் பதிவு செய்ய வசதியாக கூடுதல் வில்லைகள் தேவைப்படுகின்றன. தற்போது, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான வருகிற 28 மற்றும் 29-ம் தேதி ஆகிய தேதிகளில் அதிக பத்திரப் பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்ய கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.


