Last Updated:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஐபிஎல் முன்னாள் நிர்வாகி லலித் மோடி ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
18 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அடித்த வீடியோவை சமீபத்தில் ஐபிஎல் முன்னாள் நிர்வாகி லலித் மோடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து லலித் மோடி பதில் அளித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஸ்ரீசாந்தும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங்கும் விளையாடினர். இந்த தொடரில் ஒரு போட்டி முடிந்த போது கோபத்தில் ஹர்பஜன் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அடித்தார். இதன் பின்னர் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டிருந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் ஹர்பஜன் சிங் அடித்த வீடியோ வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஐபிஎல் முன்னாள் நிர்வாகி லலித் மோடி ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி, லலித் மோடியின் இந்த செயல் அருவருப்பானது, மனிதாபிமானமற்றது என்று கூறி விளம்பரத்திற்காகவும் வெறும் வியூஸ்களுக்காகவும் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக கடுமையாக விமர்சித்து இருந்தார்.
August 31, 2025 1:37 PM IST


