International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதையடுத்து ஈரான் அமெரிக்காவின் நிலைகள் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமெரிக்கா கை விரித்துவிட்டது.
சும்மா இருந்த ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து உலக நாடுகள் அமெரிக்காவை சமாதனப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தன. ஆனால், ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்று சொல்லி, மீண்டும் ஈரானை அமெரிக்கா தாக்க தொடங்கியிருக்கிறது. பதிலுக்கு ஈரானும் தாக்க.. தற்போது மத்திய கிழக்கு முழுக்க பதற்றம் அதிகரித்திருக்கிறது.
தாக்குதலின் ஒரு பகுதியாக சர்வதேச கச்சா எண்ணெய் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடியுள்ளது. வழக்கம் போல இதுபோன்ற சம்பவங்களில் அமெரிக்கா உள்ளே இறங்கி.. நீரிணையை திறக்கும். ஆனால், இந்த முறை நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது. அதே நேரம் ஈரான், நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இந்த பதற்றம் காரணமாக மீண்டும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே, பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில்தான் இருக்கிறது. அப்படி இருக்கையில், இப்போது மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருப்பது.. இந்தியாவில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.
விஷயம் முடிவுக்கு வர வேண்டும் எனில், மீண்டும் இரு நாடுகளும் உட்கார்ந்து பேச வேண்டும். அமெரிக்கா அதற்கு முன்வராது.. வந்தாலும் ஈரான் சும்மா இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

