ஜார்ஜ் டவுன்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை கெடாவில் உள்ள கம்போங் பாடாங் உபி, லாபு பெசார், கூலிம் என்ற இடத்தில் எலி விஷம் கலந்ததாக நம்பப்படும் கெரோப்போக் (keropok) சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சகோதரர்கள் இன்னும் மயக்கமடைந்து, சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முஹமட் அகில் சௌகி நூர் சுஃபியான், 3, மற்றும் முஹமட் லூத் சௌகி, 2, என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட இருவரும் இங்குள்ள பினாங்கு மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது தாயார் நுரைன் ஹஸ்னோரிசல், 25, கூறுகையில் தனது இரு மகன்களும் கோமா நிலையில் இருப்பதாக டாக்டர் கூறியதாகவும், தனது பிள்ளைகள் இந்த சிக்கலிலிருந்து மீண்டு வர அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் சொன்னார்.
“அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள, அவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட பல வகையான மருந்துகளை வழங்குகிறார்கள், ஆனால் இன்று வரை இருவரும் இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை என்பது மிகவும் பயமாக இருக்கிறது ” என்று அவர் இன்று மருத்துவமனையில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, குரங்குகளை பொறிவைத்துப் பிடிக்க தோட்டக்காரர் தோட்ட வேலியில் தொங்கவிட்ட எலி விஷம் கலந்த கொரோப்போக் நொறுக்கு தீனியை அவர்கள் சாப்பிட்டதாக கூறப்பட்டது.

![]](https://makkalosai.com.my/wp-content/uploads/2024/07/unnamed-file-696x435.jpg)
