• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம்.. மனைவிக்கு முதல் கணவன் செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம்.. மனைவிக்கு முதல் கணவன் செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 19, 2026 4:55 PM IST

மகேஷ், சுனிதா ஆகியோர் ஐதராபாத், அமெரிக்கா, வனஸ்தலிபுரம் தொடர்பாக; விவாகரத்து, இரண்டாவது திருமணம், கொலை சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Rapid Read
மனைவியை கொன்ற முதல் கணவன்
மனைவியை கொன்ற முதல் கணவன்

தெலங்கானாவில் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்ட முன்னாள் மனைவியை, வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் மகேஷ் மற்றும் சுனிதா. இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஆக வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சுனிதா நடவடிக்கைகள் மீது மகேசுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.  இதனால் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த சுனிதா நீதிமன்றம் மூலம் மகேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சுனிதா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சுனிதா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மகேஷால் ஏற்றுக் கொள்ள முடியாமல், கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனையடுத்து விவாகரத்து பெற்ற மனைவியை கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. சுனிதா தனது இரண்டாவது கணவருடன் தெலங்கானாவின் வனஸ்தலிபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்கள் கூட்டத்தில் புர்கா அணிந்து சென்ற இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பகீர் சம்பவம்!

இந்நிலையில், இதை தெரிந்து கொண்ட மகேஷ், கட்டை, கத்தி, பெட்ரோல் கேன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த சுனிதாவின் தலையில் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் மகேஷ் கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்து சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது, பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். ஆனாலும் பொதுமக்கள் சேர்ந்து அவரை பிடித்து சரமாரியாக அடித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மகேஷை கைது செய்த போலீசார் சுனிதா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது, பிரிட்டன் அரசியலில் பரபரப்பு – Sri Lanka Tamil News

Next Post

World Cup T20 : லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸிற்கு 4ஆவது வெற்றி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இத்தாலி | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸிற்கு 4ஆவது வெற்றி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இத்தாலி | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸிற்கு 4ஆவது வெற்றி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இத்தாலி | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin