ஜெயம் ரவி தற்போது காதலிக்க நேரமில்லை,பிர்தர்,ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவரது கடைசி வெளியீடு சைரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல திரையுலக பிரபலங்களின் விவாகரத்துக்கு மத்தியில் அதில் ஜெயம் ரவியும் இணைவார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் படத்தின் டயலாக்குகளை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், காதல் என்ற சொல் வார்த்தையல்ல வாழ்க்கை என்று கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஜெயம் படம் வெளியாகி நேற்றுடன் (ஜூன் 20) 21 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை நினைவுபடுத்தும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர்களின் விவாகரத்து குறித்த வதந்திகள் அனைத்தும் பொய் என அவரது வசனத்தை காண்பித்து நிரூபித்துள்ளார்.

