Last Updated:
வான் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 67 வயதான முதியவர் ஒருவர் சியோலில் அமைந்துள்ள ஒரு சுரங்கப்பாதை ரயிலில் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
தனக்கு விவாகரத்தான கோபத்தையும், எரிச்சலையும் எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் நகரும் ரயிலுக்கு 67 வயது முதியவர் ஒருவர் தீ வைத்து கோபத்தை ஆற்றிக்கொண்ட சம்பவம் குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயிலானது ஹான் ஆற்றை சுரங்கப்பாதை வழியாக கடந்து கொண்டிருக்கும்போது, இந்த தீ வைப்பு சம்பவம் சரியாக காலை 8:42 மணிக்கு இயோயினாரு ரயில் நிலையம் மற்றும் மேப்போ ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள சியோல் சுரங்கப்பாதை தடம் ஐந்தில் நடைபெற்றது. சுரங்கப்பாதையில் இருந்த காருக்குள் பெட்ரோலை ஊற்றிவிட்டு, தன்னுடைய ஆடைகள் மீது நெருப்பை பற்ற வைத்திருக்கிறார் வான்.
இந்த தீ வைப்பு சம்பவத்தால் ரயிலில் பயணித்த 22 பயணிகள் நெருப்புப் புகையை சுவாசித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 129 நபர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த தீ விபத்துக்கு காரணமான வானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ வைப்பு சம்பவம் சப்வே கார் உட்பட 330 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய விவாகரத்து வழக்கு காரணமாக இருந்த கோபம் மற்றும் எரிச்சலின் விளைவாக வான் இந்த தீ வைப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாக விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, ஜூன் 9ஆம் தேதி அன்று காவல்துறையினர் வானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எதிர்காலத்தில் இதே மாதிரியான சம்பவம் நடைபெறுவதை தடுப்பதற்கு நிர்வாகம் தொடர்ந்து இந்த சம்பவச் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது.
June 27, 2025 7:51 PM IST
விவாகரத்தான கோபத்தை வெளிப்படுத்த நகரும் ரயிலுக்கு தீ வைத்த நபர்…! அடுத்ததாக நடந்தது என்ன…?