பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 600 மில்லியன் ரூபாவை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் சுமார் 80% இந்த வாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமர்ப்பிக்க வேண்டும்
இந்த பேரிடருக்குப் பிறகு மீண்டும் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தின் பரப்பளவு 95.000 ஹெக்டேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயிர் சேத உதவித்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள், அந்தப் பகுதியில் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடமிருந்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் விண்ணப்ப படிவத்தை அந்தப் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளின் செயலாளர்/தலைவர், பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி அலுவலர் மற்றும் விவசாய ஆலோசகர் ஆகியோரின் கையொப்பங்களுடன் உடனடியாக விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

