• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரும் ஊக்கத்தொகை… வேளாண் அமைச்சர் வினோத் அறிவிப்பு | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரும் ஊக்கத்தொகை… வேளாண் அமைச்சர் வினோத் அறிவிப்பு | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 2:29 PM IST

விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடிப் பணப்பரிவர்த்தவனை வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர்  ஆர்.வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.

விவசாயி
விவசாயி

தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ. 603.34 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்  ஆர்.வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கரும்பு விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையினைப் படிப்படியாக நிறைவேற்றிடும் வண்ணம் வெற்றித் தமிழ்நாட்டில், இனிக்கும் கரும்பினை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் காத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் கரும்பிற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன் வாயிலாக  கரும்பு விவசாயிகள், கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.4,000 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில்  கரும்பு சாகுபடிப் பரப்பு உயர்ந்து சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மேம்படுவதுடன், சர்க்கரை மற்றும் உப பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்புக்கு முன் எப்போதும் இல்லாத வகையில்  ரூ. 709.50  சிறப்பு ஊக்கத் தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி     2025-26-ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 4000 கிடைப்பது உறுதி செய்தல்

தமிழ்நாட்டில், 2025-2026 ஆம் ஆண்டு பருவத்தில் அரவைப்பணி மேற்கொண்டுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளில் 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்திற்கு  ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.3,290.50 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.709.50 யையும் சேர்த்து, டன் ஒன்றிற்கு ரூ.4,000/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு மேல் உள்ள கரும்பிற்கு அதற்கேற்ப ரூ.4000-க்கும் அதிகமாக கரும்பு விலை கிடைக்கப்பெறும்.

மேலும், இந்த அரசாணையின்படி, 01.10.2025 முதல் 30.09.2026 வரை  சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவினரால்  பரிந்துரைக்கப்பட்டு,  சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின்னர் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு செக்… அக்.31க்குள் சொத்து விபரம் தாக்கல் செய்யாவிட்டால் சிக்கல்?

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையினால் ஒத்திசைவு செய்யப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயனடைவர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

21 மனைவிகள் வங்கதேச பிச்சைக்காரருக்கு.. ஒரே அறையில் வாழ்க்கை! ஷிப்ட் போட்டு பிச்சை.. அங்கதான் விஷயம் | Bangladesh Beggar’s Unusual Life.. 21 Wives in One Room, Begging in Shifts.. What’s the Twist?

Next Post

விளையாட்டுத் திடலில் ஆயுதங்களுடன் மோதிய 14 சிறுவர்கள் கைது

Next Post

விளையாட்டுத் திடலில் ஆயுதங்களுடன் மோதிய 14 சிறுவர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin