பல திருப்பங்கள் நிறைந்த போட்டி
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, வில் ஜாக்ஸின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜாக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27 ரன்களும் எடுத்தனர். இந்த மூன்று பேரைத் தவிர, வேறு எந்த மும்பை பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை. குஜராத் அணிக்காக சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர பவுலிங் செய்த மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்

