Last Updated:
5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் விளையாட்டு திறனை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒரு பிரம்மாண்ட ‘டேலன்ட் ஹன்ட்’ (Talent Hunt) நடத்தப்படும்
தேசிய விளையாட்டு தினத்தை (National Sports Day) முன்னிட்டு, நாட்டின் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ‘கேல் கீ பாத், பிரதான்மந்திரி மோடி கே சாத்’ (Khél Ki Baat, PM Modi Ke Saath) என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் காணொளி வாயிலாக நேரடியாக உரையாடினார். நாடு முழுவதும் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த உரையாடலின் போது, “விளையாடுபவரே பிரகாசிப்பார்” (Jo Khelega, Wo Khilega) என்ற புதிய தாரக மந்திரத்தை பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வழங்கினார்.


