• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விலை உயரும் நுகர்வோர் பொருட்கள்… ஷாப்பிங் கட்டணம் அதிகரிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
விலை உயரும் நுகர்வோர் பொருட்கள்… ஷாப்பிங் கட்டணம் அதிகரிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூலப்பொருட்கள் விலை உயர்வால், நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் தங்களது மார்ஜின் குறையாமல் இருக்க விலையை உயர்த்தியுள்ளன. ஓராண்டாக விலையை ஏற்றாமல் இருந்த FMCG நிறுவனங்கள் கடந்த 2-3 மாதங்களாக மெதுவாக விலையை ஏற்ற ஆரம்பித்து உள்ளன. வேகமாக விற்கப்படும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்களின் உணவுகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மீது 2 முதல் 17% வரை விலை உயர்த்தியுள்ளதால், ஒரு குடும்பத்தின் மாதாந்திர வீட்டு ஷாப்பிங் பில்களின் விலை உயர்ந்துள்ளன.

விளம்பரம்

வர்த்தக தரவு மற்றும் ஆய்வாளர்களின் படி, சோப்புகள் மற்றும் பாடி வாஷ்கள் மீது 2 முதல் 9% வரையும், ஹேர் ஆயில்கள் மீது 8 முதல் 11% வரையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 3 முதல் 17% வரையும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

2022ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த விலைவாசி உயர்வு, 2023ம் ஆண்டு ஆரம்பம் வரை ஓராண்டுக்கு நீடித்தது. இந்த காலகட்டத்தில் நிறுவனங்கள் விலையை உயர்த்தி லாபத்தை சீராக வைத்து இருந்த போதிலும், விற்கும் பொருட்களின் அளவு வளரவில்லை. இதனால் 2024ம் ஆண்டு தொடக்கம் வரை விலையை ஏற்றாமல் நிறுவனங்கள் சமாளித்து வந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் விலைகளை உயர்ந்து வருகின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் எண்ணெய் வகைகளில் கச்சா எண்ணெய் மற்றும் பாம் ஆயில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பால், சர்க்கரை, காபி, தேங்காய் மற்றும் பார்லி போன்ற மூலப்பொருட்கள் விலைகள் அதிகரித்து வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எஃப்எம்சிஜி நிறுவனமான மரிகோ, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேர் ஆயில் பேக்குகளின் விலையை ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் 6% உயர்த்தியுள்ளதாகவும், தேங்காய் விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இன்னொரு முறை விலை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்நாக்ஸ் தயாரிப்பாளரான பிகாஜி, 2024-25 நிதியாண்டில் விலையை 2 முதல் 4% வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் விலை உயர்வை தொடங்கியுள்ளது என்றும், அதே நேரத்தில் டாடா நுகர்வோர் தயாரிப்புகளும் தனது போட்டியாளர்களுக்கு இணையாக விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

விளம்பரம்

சந்தையின் முன்னணி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2023-24 நிதியாண்டில் விலை உயர்வு ஏற்படுத்தவில்லை. எனினும், டாபர் இந்தியா மற்றும் இமாமி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் குறைந்த ஒற்றை இலக்க விலை உயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட சோப்புகளின் ஸ்டாக் கீப்பிங் யூனிட்களின் விலையை 4 முதல் 5% உயர்த்தியுள்ளது, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் டவ் விலையை 2% உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் விப்ரோவும் சாண்டூரின் விலையை 3% உயர்த்தியுள்ளது என்று கோடக் நிறுவன பங்குகள் மற்றும் வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

கோல்கேட் விற்கும் பாமோலிவ் பாடி வாஷின் விலையை ஒற்றை இலக்கத்தில் உயர்ந்தியுள்ளது, அதே சமயம் பியர்ஸ் பாடி வாஷின் விலை 4% உயர்ந்துள்ளது.

Also Read | U
PI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

டிடர்ஜென்ட் பிராண்டுகளான, HUL, ப்ராக்டர் & கேம்பிள் ஹைஜீன் மற்றும் ஹெல்த் கேர் மற்றும் ஜோதி லேப்ஸ் ஆகியவற்றின் விலையும் 1-10% வரை அதிகரித்துள்ளது. HUL தனது ஷாம்பு விலையை 4% வரை அதிகரித்துள்ளது.

விளம்பரம்

நெஸ்லே நிறுவனம் 8 முதல் 13% வரையும் விலையை உயர்த்தியுள்ளது, மேலும் மேகி ஓட்ஸ் நூடுல்ஸ் விலை 17% அதிகரித்துள்ளது மற்றும் ஐடிசியின் ஆஷிர்வாத் முழு கோதுமை விலை ஒற்றை இலக்கத்தில் உயர்ந்துள்ளது.

.

Read More

Previous Post

“லாராவின் கணிப்பு சரி என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்” – ரஷித் கான் பெருமிதம் | brian lara put us in semifinals we proved him right Rashid khan afghan t20 wc

Next Post

லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலை சலுகையாளரின் தலைமை நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது | Makkal Osai

Next Post
லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலை சலுகையாளரின் தலைமை நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது | Makkal Osai

லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலை சலுகையாளரின் தலைமை நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin