ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் நாளை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் நிலையில், இன்றே இதை செய்தால் ரூ.600 வரை சேமிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கான பல ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணம் நாளை முதல் (ஜூலை 3) உயர்கிறது. எனவே, இப்போதே நீங்கள் ஆண்டு முழுவதற்கும் ரீசார்ஜ் செய்து விட்டால் பணம் சேமிக்கப்படும். ஜியோவின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,999. ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை 365 நாட்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜூலை 3க்குப் பிறகு இதன் விலை ரூ.3,599ஆக உயரும். ஜியோவின் இந்த திட்டத்தை நீங்கள் உடனடியாக ரீசார்ஜ் செய்துவிட்டால், வரம்பற்ற 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். இல்லையெனில் நீங்கள் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போதைய ரீசார்ஜ் திட்டத்தின் முடிவு தேதி இன்னும் இருந்தால், இப்போது ரீசார்ஜ் செய்தால், அந்த செல்லுபடியாகும் காலம் முடிந்ததும், புதிய ரீசார்ஜ் திட்டம் தானாகவே செயல்படும்.
ஏர்டெல் நிறுவனமும் ஜூலை 3 வரை பழைய விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜூலை 3க்கு முன் வருடாந்திர திட்டங்களை எடுத்தால், ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் திட்டம் கிடைக்கும். தற்போது ஏர்டெல்லின் வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.2,999 ஆக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் 365 நாட்களும் தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜூலை 3க்குப் பிறகு இந்த திட்டத்தை எடுத்தால், ரூ.600 கூடுதலாக செலுத்த வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
