ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆர்சிபி அணி 172 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசிஸ் களம் இறங்கினர்.
இருவரும் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாட ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 14 பந்துகளில் டூப்ளசிஸ் 17 ரன்களும், 24 பந்தில் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேமரூன் கிரீனும் அதிரடியாக விளையாடுவதை தவிர்த்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு அதிரடியாக ரன்களை சேர்த்த ரஜத் பட்டிதார் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் மஹிபால் லோம்ரோர் 32 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
