• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலி கொடுத்த ஆதரவால் சிறப்பாக செயல்பட்டேன்: சொல்கிறார் கிருணல் பாண்டியா | I performed well with support of Virat Kohli Says Krunal Pandya ipl

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
விராட் கோலி கொடுத்த ஆதரவால் சிறப்பாக செயல்பட்டேன்: சொல்கிறார் கிருணல் பாண்டியா | I performed well with support of Virat Kohli Says Krunal Pandya ipl
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்​பிடல்ஸ் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 162 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ராகுல் 39 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​களும் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் சேர்த்​தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்​ஸிஸ் 22 ரன்​கள் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி சார்​பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் வழங்கி ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

163 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 18.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 165 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கிருணல் பாண்​டியா 47 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களுடன் 73 ரன்​களும், விராட் கோலி 47 பந்​துகளில், 4 பவுண்​டரி​களுடன் 51 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 84 பந்​துகளில் 119 ரன்​கள் சேர்த்​தது.

கிருண் பாண்​டியா களமிறங்​கும் போது பெங்​களூரு அணி 4 ஓவர்​களில் 26 ரன்​களுக்கு 3 முக்​கிய விக்​கெட்​களை இழந்​திருந்​தது. அந்த சூழ்​நிலை​யில் விராட் கோலி​யுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​ததுடன் கடைசி வரை களத்​தில் இருந்து நின்று அணியை வெற்றி பெற செய்​த​தில் கிருணல் பாண்​டியா முக்​கிய பங்கு வகித்​தார்.

ஆர்​சிபி அணிக்கு இது 7-வது வெற்​றி​யாக அமைந்​தது. 10 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 7 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 14 புள்​ளி​கள் பெற்று முதலிடத்​துக்கு முன்​னேறியது. டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு இது 3-வது தோல்​வி​யாக அமைந்​தது. 9 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆட்ட நாயகன் விருது வென்ற கிருணல் பாண்​டியா கூறிய​தாவது:

எனது செயல் திறன் மிக​வும் திருப்தி அளிக்​கிறது. எனது பங்கு தெளி​வாக இருந்​தது. நாங்​கள் ஆரம்​பத்​தில் மூன்று விக்​கெட்​டு​களை இழந்​தால், நான் உள்ளே சென்று ஒரு பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என்​பதே திட்​ட​மாக இருந்​தது.

டிம் டேவிட், ஜிதேஷ் சர்​மா, ரொமேரியா ஷெப்​பர்ட் போன்ற சிறந்த பவர்​ஹிட்​டர்​கள் எங்​களிடம் உள்​ளனர். இதனால் பந்​து​ வீச்சை நொறுக்க முடி​யும். எனது பங்கை நிறைவேற்​றிய​தில் மகிழ்ச்சி அடைகிறேன். விராட் கோலி மறு​முனை​யில் இருந்​த​தால் மிக​வும் எளி​தாக இருந்​தது. முதல் 20 பந்​துகள் அசவு​கரியமாக இருந்​தது.

ஆனால் அவர், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்​தார். இதனால் எனது ஆட்​டத்தை திரும்​பப் பெற்​றேன். அந்த வகை​யில் விராட் கோலியை பாராட்ட வேண்​டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் நான் எப்​போதும் சிக்​க​ன​மாக வீசக்கூடியவன்தான். ஒரு பந்​து​வீச்​சாள​ராக, நான் எப்​போதும் ஒரு படி மேலே இருக்க விரும்​பு​கிறேன். எனது பந்​து​வீச்சு வேகத்​தின் மாறு​பாடு​களை பார்த்​தால் அது தெரி​யும். பேட்​ஸ்​மேன்​களின் பலத்தை அறிந்​து, அதை எனக்கு சாதக​மாக பயன்​படுத்த முயற்​சிக்​கிறேன்.

காலப்​போக்​கில், பேட்​ஸ்​மேன்​களின் திறனும், டெக்​னிக்​கும் மேம்​பட்டு வரு​கிறது. இதனால் ஒரு பந்​து​வீச்​சாள​ராக ஒரு படி மேலே இருக்க வேண்​டும் என்​பதை நான் உணர்ந்​துள்​ளேன். எனது ஆயுதக் களஞ்​சி​யத்​தில் என்ன இருக்​கிறது என்​பதை பேட்​ஸ்​மேன்​கள் யூகித்​துக் கொண்டே இருக்க வேண்​டும் என்று நான் விரும்​பு​கிறேன்​. இவ்​வாறு கிருணல்​ பாண்​டி​யா கூறினார்.



Read More

Previous Post

இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

Next Post

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. மே 1 முதல் அமல்!

Next Post
ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. மே 1 முதல் அமல்!

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. மே 1 முதல் அமல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin