• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வியட்நாம் படகு விபத்து துயரம்… தமிழர்கள் 8 பேர் உயிரிழந்த சோகம்..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
வியட்நாம் படகு விபத்து துயரம்… தமிழர்கள் 8 பேர் உயிரிழந்த சோகம்..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 11, 2026 5:36 PM IST

படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுயநினைவின்றி இருந்தவர்களை சிபிஆர் முறை மூலம் காப்பாற்ற அங்கிருந்த மீட்புப்படையினர் முயன்றனர்.

News18
News18

வியட்நாம் படகு விபத்தில் 8 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பலர் பயணித்த சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் பழனியை சேர்ந்த ஒருவர் உட்பட தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பு குவாக் தீவுக்கு அருகே இன்று காலை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் மற்றும் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 32 பேர் அதில் பயணம் செய்ததாக தெரிகிறது. தீவுக்கு தெற்கு பகுதியில் பயணித்த போது அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுயநினைவின்றி இருந்தவர்களை சிபிஆர் முறை மூலம் காப்பாற்ற அங்கிருந்த மீட்புப்படையினர் முயன்றனர்.

இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த 44 வயதான முருகபிரபுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகபிரபு மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் பழனியில் லாவா செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களாக இருந்தனர். இவர்களது சிறப்பான வணிக செயல்பாட்டிற்காக, அந்த நிறுவனம் சார்பில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. இந்நிலையில் முருகபிரபு படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரும் பணிகள் நடந்துவருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விபத்தில் உயிர் பிழைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மல் குமார் நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில், விபத்தில் உயிரிழந்த பெரும்பாலானோர் தமிழர்கள் தான் என்கிற அதிர்ச்சியை பகிர்ந்துகொண்டார். சுற்றுலா அழைத்துச் சென்ற செல்போன் நிறுவனம் தான் இந்த படகு சவாரியையும் ஏற்பாடு செய்ததாக கூறிய அவர், விபத்தில் சிக்கிய 30 பேரில் 20 பேருக்கும் அதிகம் தமிழர்கள் தான் என்றும் இதுவரை 8 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

முதல்ல ஈசிஆர்.. இப்போ கோயம்பேடு.. தலைமை செயலகத்தை மாற்ற விஜய் திட்டம்போடுவது ஏன்? | Tamil Nadu Secretariat Shifting to Koyambedu – Why CM Vijay is Planning the Move!

Next Post

ஜோகூர் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காடு வாக்காளர்கள் வாக்குப்பதிவு! | Makkal Osai

Next Post
ஜோகூர் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காடு வாக்காளர்கள் வாக்குப்பதிவு! | Makkal Osai

ஜோகூர் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காடு வாக்காளர்கள் வாக்குப்பதிவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin