வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று (07.05.2026) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வியட்நாம் ஜனாதிபதியுடன் சுமார் 200 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் நாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நாளை (08.05.2026) இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பேச்சுவார்த்தைகள்
இதன்போது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையேயான ஏற்கனவே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பல புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாளை (2026.05.08) நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசமுறை வருகையைக் கருத்தில் கொண்டு, மே 08 ஆம் திகதி வரை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்புப் போக்குவரத்துத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

