Last Updated:
சின்னர், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று, முதல் இத்தாலி வீரராக வரலாறு படைத்தார். 34 கோடி ரூபாய் பரிசு பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதாகாக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில், ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் ஸ்பெயினை சேர்ந்த அல்கராஸும், உலகின் முதல்நிலை வீரரான சின்னரும் மோதினர். முதல் செட்டில் 4-6 என்ற கணக்கில் பின்தங்கிய சின்னர், பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த செட்களில் ஆதிக்கம் செலுத்தினார்.
சுமார் 3 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 4-6, 6-4, 6-4, 6-4, என்ற செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தி சின்னர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார்.
மேலும், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், அல்கராஸிடம் அடைந்த தோல்விக்கும், விம்பிள்டன் வெற்றி மூலம் சின்னர் பழி தீர்த்துக் கொண்டார். அதுமட்டுமின்றி, 5 முறை அல்கராஸிடம் அடைந்த தொடர் தோல்விக்கும் சின்னர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற சின்னருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
July 14, 2025 7:04 AM IST


