Last Updated:
4ஆவது சுற்றுப் போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவை நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்கராஸ் எதிர்கொண்டார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு நட்சத்திர வீரர் அல்கராஸ் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலரும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் 4ஆவது சுற்றுப் போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவை நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்கராஸ் எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அல்கராஸ், 7-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல, மகளிர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா, காலிறுதிக்குள் கால் பதித்துள்ளார். பெல்ஜியம் வீராங்கனையான எலிஸ் மெர்டனை எதிர்கொண்ட அவர், 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
22 வயதாகும் அல்கராஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் . 2018 ஆம் ஆண்டிலிருந்து அவர் டென்னிஸ் விளையாடி வருகிறார். இதேபோன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை எதிர்கொண்டார்.
July 07, 2025 3:58 PM IST