Last Updated:
அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, ஏர் இந்தியா போயிங் 787 விமானங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. 9 விமானங்கள் சோதிக்கப்பட்டு, மீதமுள்ள 24 விரைவில் சோதிக்கப்படும்.
போயிங் 787 ரக விமானங்களை ஒருமுறை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, நாடு முழுவதும் போயிங் 787 ரக விமானங்களை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடம் உள்ள போயிங் 787 ரக விமானங்களை ஒருமுறை பாதுகாப்பு சோதனை ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை 9 போயிங் 787 ரக விமானங்களை பாதுகாப்பு தரநிலை சோதனைக்கு உட்படுத்தியதாகவும், மீதமுள்ள 24 விமானங்கள் விரைவில் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி, டாக்டர்கள் விடுதியின் மேற்கூரையில் சிக்கியிருந்த நிலையில், கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது.
அந்தப் பகுதியில் விமானப் பணிப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விமானப் பாகங்களில் சிக்கியிருந்த சடலத்தை, மீட்புப் படையினர் வெட்டி வெளியே எடுத்தனர்.
Ahmedabad,Gujarat
June 14, 2025 7:19 PM IST


