• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்.. எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ கட்டணங்கள் அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்.. எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ கட்டணங்கள் அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலகளவில் எரிபொருள் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ATF விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், விமான இயக்கச் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு அக்டோபர் 6, 2026 அதாவது இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் அமலுக்கு வருகிறது. அதிகரித்துள்ள முழுச் செலவையும் பயணிகள் மீது சுமத்தாமல், மிகவும் குறைந்த அளவிலான கட்டண மாற்றத்தையே செய்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்குள்ளான உள்நாட்டுப் பயணங்களுக்கு, பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் இந்த எரிபொருள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 500 கிலோமீட்டர் வரையிலான குறுகிய தூரப் பயணங்களுக்கு ரூ. 375-ம், 501 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ரூ. 600-ம் வசூலிக்கப்படும்.

மேலும், 1,001 முதல் 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 900, 1,501 முதல் 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1,150 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட தூர உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இனி ரூ. 1,300 கூடுதல் எரிபொருள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதேபோல சர்வதேச வழித்தடங்களுக்கும் அவற்றின் தூரம் மற்றும் நாடுகளுக்கு ஏற்ப புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சார்க் (SAARC) நாடுகளைப் பொறுத்தவரை 500 கி.மீ தூரம் வரை ரூ. 1,000 கட்டணமும், 501 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் வழித்தடங்களுக்கு ரூ. 3,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா, GCC மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், வட மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு ரூ. 5,500 கட்டணம் வசூலிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணங்களுக்கு ரூ. 6,000-மும், ஐரோப்பிய நாடுகளுக்கான நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10,000-மும் கூடுதல் எரிபொருள் கட்டணமாகச் சேர்க்கப்படும்.

இந்தக் கட்டண உயர்வு விமானப் பயணிகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்ட இண்டிகோ நிர்வாகம், சர்வதேச சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருமென்றும், சூழ்நிலைக்கு ஏற்ப வருங்காலத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

அதே வேளையில், வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து மலிவான, வசதியான மற்றும் நம்பகமான சேவை வழங்குவதில் உறுதியோடு இருப்பதாகவும் நிறுவனம் தனது விளக்கத்தில் தெரிவித்து உள்ளது.

Read More

Previous Post

மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம் | 28-Year-Old Engineer Dies After Jumping From 43rd Floor due to Alimony, Child’s medical bill

Next Post

ஆய்வகத்திலிருந்து பரவிய கொடூர பாக்டீரியா.. இளம் விஞ்ஞானி அதிர்ச்சி மரணம்! மீண்டும் கோவிட் பெருந்தொற்றா?

Next Post
ஆய்வகத்திலிருந்து பரவிய கொடூர பாக்டீரியா.. இளம் விஞ்ஞானி அதிர்ச்சி மரணம்! மீண்டும் கோவிட் பெருந்தொற்றா?

ஆய்வகத்திலிருந்து பரவிய கொடூர பாக்டீரியா.. இளம் விஞ்ஞானி அதிர்ச்சி மரணம்! மீண்டும் கோவிட் பெருந்தொற்றா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin