• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் தடுமாறி விழுந்த மூதாட்டி… ஐசியு-வில் தீவிர சிகிச்சை

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் தடுமாறி விழுந்த மூதாட்டி… ஐசியு-வில் தீவிர சிகிச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 08, 2025 8:24 PM IST

கடந்த மாதம் தான், மும்பை விமான நிலையத்தில் “போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இல்லை” என்று கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது.

News18News18
News18

விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விமானக் கட்டணங்கள் அதிகரித்து வரும் அதே வேகத்தில், விமான நிலையங்களில் விமானச் சேவைகளும் குறைந்து வருவதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர். ஏர் இந்தியா விமானங்களில் இருக்கைகள் தொடர்பான தகராறுகள் பல முறை காணப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமான நிறுவனங்களை விமர்சித்து பேபேசியிருந்தார். இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாததால், அவர் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.

இதில் தளர்ந்துபோன அவர் தடுமாறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவர் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி விமான நிலையத்தில், அவர் ஏற்கனவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தும், ஏர் இந்தியா அவருக்கு சக்கர நாற்காலியை மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் பேத்தி, தனது பாட்டிக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சக்கர நாற்காலி வந்த பிறகு, மூதாட்டி இரத்தம் வழியும் உதடு மற்றும் தலை மற்றும் மூக்கில் காயங்களுடன் விமானத்தில் ஏறினார். தனது பாட்டி 2 நாட்களாக ஐ.சி.யூவில் இருப்பதாக அவரது பேத்தி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தான், மும்பை விமான நிலையத்தில் “போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இல்லை” என்று கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது.

இதையும் படிங்க – Womens Day 2025: “உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம்” – நீடா அம்பானி விழிப்புணர்வு வீடியோ!

பிப்ரவரி 12 அன்று, நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் தனது மனைவியுடன் வந்த 80 வயது பயணி ஒருவர், சக்கர நாற்காலி இல்லாததால் 1.5 கி.மீ தூரம் நடக்க வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் மும்பை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

First Published :

March 08, 2025 8:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் தடுமாறி விழுந்த மூதாட்டி… ஐசியு-வில் தீவிர சிகிச்சை

Read More

Previous Post

Tamilmirror Online || முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக திருத்தவும்

Next Post

IPL 2025 : கொல்கத்தா அணியின் வெற்றியில் கவுதம் காம்பீரின் பங்களிப்பு.. அனுபவம் பகிர்ந்த ஷாரூக்கான்

Next Post
IPL 2025 : கொல்கத்தா அணியின் வெற்றியில் கவுதம் காம்பீரின் பங்களிப்பு.. அனுபவம் பகிர்ந்த ஷாரூக்கான்

IPL 2025 : கொல்கத்தா அணியின் வெற்றியில் கவுதம் காம்பீரின் பங்களிப்பு.. அனுபவம் பகிர்ந்த ஷாரூக்கான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin