Last Updated:
விமான டிக்கெட் விலை சந்தையை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
ஆண்டு முழுவதுக்கும் விமான டிக்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமான டிக்கெட் விலையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, பண்டிகை நாட்களின்போது குறிப்பிட்ட நகரங்களுக்கு மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள் என்றும் அப்போது தேவை அதிகரிப்பின் காரணமாக டிக்கெட் விலை உயரும் என்றார்.
விமான டிக்கெட் விலை சந்தையை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
இந்நிலையில் விமான சேவை பாதிப்பு தொடர்பாக கேப்டன் ஜான் இல்சன் என்பவர் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளது இண்டிகோ நிறுவனம். இந்த குழுவானது விசாரணை நடத்தி இண்டிகோ நிறுவனத்திடம் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
December 13, 2025 10:12 AM IST


