• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ல் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா: சர்வதேச விமான நிலைய கவுன்சில் தகவல் | India overtakes China in air passenger traffic

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ல் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா: சர்வதேச விமான நிலைய கவுன்சில் தகவல் | India overtakes China in air passenger traffic
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது.

உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய விமானச் சந்தை உள்ளது.

இந்நிலையில் ஏசிஐ அமைப்பின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஸ்டெஃபனோ பரோன்சி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் விமானப் பயணிகள் போக்குவரத்தில் ஒரு வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.

இந்தியாவின் விமானப் பயணிகள் வளர்ச்சி விகிதம் 2026-ல் 10.5% ஆகவும் 2027-ல் 10.3% ஆகவும் இருக்கும் என ஏசிஐ மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி விகிதம் முறையே 8.9% மற்றும் 7.2% ஆக இருக்கும். எனவே 2026-ல் சீனாவை இந்தியா முந்தும்.

2023-27-ல் இந்தியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்துக்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.5% ஆக இருக்கும். இது சீனாவின் 8.8 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.

2023-2053 காலகட்டத்தில் 5.5 சதவீதத்துடன் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தையாகவும் இந்தியா இருக்கும். அதேநேரத்தில் சீனாவின் வளர்ச்சி 3.8 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் தற்போது 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.



Read More

Previous Post

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 17 மாத பேரனுக்கு டிவிடெண்டில் ரூ.3.3 கோடி வருவாய்! | Narayana Murthy 17 month old grandson Ekagrah Rohan earns Rs 3.3 crore in dividends

Next Post

மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள்

Next Post
மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள்

மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin