Last Updated:
இத்தாலியில் பெர்கமோ விமான நிலையத்தில், 35 வயதான ஆண்ட்ரியா ருஸ்ஸோ, விமானத்தின் இன்ஜினுக்குள் குதித்து உயிரிழந்தார்.
இத்தாலியில் புறப்படத் தயாரான விமானத்தின் இயந்திர இறக்கைக்குள் குதித்து ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 8ஆம் தேதி, பெர்கமோ-ஓரியோ அல் செரியோ விமான நிலையத்திற்கு வந்த 35 வயதான ஆண்ட்ரியா ருஸ்ஸோ, வருகைப் பகுதியைக் கடந்த பிறகு, விமான நிறுத்துமிடத்திற்கு நேரடியாகச் செல்லும் பாதுகாப்புக் கதவைத் திறந்து ஓடினார். வோலோடியா நிறுவனத்தின் விமானம் ஸ்பெயினுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானம் அருகே ஓடிய ருஸ்ஸோவை பிடிக்க பணியாளர்கள் முயன்ற நிலையில் அவர் பிடிகொடுக்காமல் ஓடினார். திடீரென விமானத்தின் இன்ஜினுக்குள் குதித்த அவர் இறக்கையில் அடிபட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதனால் விமான நிலைய சேவைகள் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் துரத்தியதால் காரை வேகமாக ஓட்டி சென்ற அந்த நபர், காவலர்களிடம் பிடிபடாமல் இருக்க எக்குதப்பாய் ஓடி உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 12, 2025 3:10 PM IST