கேலாங்கில் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் கார் மோதியதில் காயமடைந்து பின்னர் இறந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
77 வயதான அவர், எஸ்ஸோ (Esso) பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாதச் சிறை
பின்னோக்கிச் சென்ற கார் மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
11 நாட்கள் சிகிச்சை
கடந்த ஜூன் 28 அன்று நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவர் 11 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும் பின்னர் சிகிச்சை பலனின்றி ஜூலை 8 அன்று இறந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்துக்கு பிறகும், ஊழியர் சுயநினைவுடன் இருந்ததாகவும், அவரால் நகர முடிந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஜாலான் பெசார் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிரடி சோதனை: 932 பேர் கைது
P-வாகன எண் கொண்ட கார்
கார் ஓட்டுநர் அவசரமாக அங்கு வந்ததாகவும், அந்த நேரத்தில் கைபேசியில் கால் செய்து கொண்டு இருந்தார் என்றும் நேரில் பார்த்தவர் கூறினார்.
அவர் ஓட்டிவந்த கார் P-வாகன உரிமத் தகடு எண் கொண்டது என சொல்லப்பட்டுள்ளது.
அதாவது அவ்வாறான (P) ஓட்டுநர்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவம் இருப்பதை அது குறிக்கின்றது.
இந்த வழக்கு தொடர்பாக 24 வயதுமிக்க அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

