Last Updated:
முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் மணமகள் காயம் அடைந்த நிலையில், திருமணத்தை தள்ளிப் போட விரும்பாத காதல் மணமகன் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மணமகளை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் நடந்துள்ள இந்த சம்பவம் மணமகனின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளதென்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தும்போலியைச் சேர்ந்த மணமகன் வி.எம். ஷரோன் மற்றும் ஆலப்புழா கொம்மடியைச் சேர்ந்த மணமகள் அவனி ஆகிய இருவருக்கும் நவம்பர் 21, 2025 அன்று அதாவது நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், திருமண நாளன்று அதிகாலையில், அலங்காரத்திற்காகச் சென்று கொண்டிருந்த மணமகள் அவனி சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவருக்கு முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காயம் பெரிதாக இருந்தபோதிலும், மணமகன் ஷரோன் மற்றும் இரு குடும்பத்தினரும் சுப முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
திருமணத்தை ஒத்திவைக்க மணமகன் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்களின் ஒப்புதலுடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளேயே எளிமையான திருமணச் சடங்குகளை நடத்த அனுமதித்தது.
இந்தத் திருமணம், உண்மையான அன்பையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக, பாலிவுட் திரைப்படமான ‘விவாஹ்’ படத்தின் காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
November 22, 2025 5:26 PM IST


