மத்திய விரைவுச்சாலையில் (CTE) நேற்று (ஏப்ரல் 29) ஏற்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆங் மோ கியோ அவென்யூ 1 அருகே, சிலேத்தர் விரைவுச்சாலை (SLE) நோக்கிச் சென்ற டாக்ஸியுடன் ஏற்பட்ட விபத்தில் 71 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு
இந்த விபத்து குறித்து அன்று அதிகாலை 4:05 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், பின்னர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பார்த்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், 67 வயதுமிக்க டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
இது குறித்த போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்

