Last Updated:
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்றதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்றதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் உறவினரான ஃபல்குனி பாண்ட்யா, அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வருகிறார். இவர் சுனிதா வில்லியம்ஸ் உடனான சில சுவாரஸ்ய தகவல்களை நியூஸ்18க்கு பகிர்ந்துள்ளார்.
அதன்படி, விண்வெளி சென்ற சுனிதா, தன்னுடன் சிறிய அளவிலான விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்றதாகவும், இது தொடர்பாக சுனிதா புகைப்படம் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல அண்மையில் நடந்த மகா கும்பமேளாவில் தான் கலந்துகொண்ட புகைப்படங்களை சுனிதாவுக்கு அனுப்பியதாகவும், பதிலுக்கு, விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மகா கும்பமேளா புகைப்படங்களை தனக்கு சுனிதா அனுப்பிவைத்ததாகவும் ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
சுனிதாவுக்கு இந்திய உணவுகள் என்றால் அலாதி பிரியம் என தெரிவித்துள்ள ஃபல்குனி, தான் மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். சுனிதாவுக்காக கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஃபல்குனி பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.
March 19, 2025 6:52 AM IST


