Last Updated:
சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார். அவர் இந்திய வீரராக அங்கு சென்ற முதல் நபர். 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா, இந்திய மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘டிராகன்’ விண்கலம் மூலம் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள வீரர்கள், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷுபான்ஷு சுக்லா பெற்றார். தொடர்ந்து அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஷுபான்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இன்று மாலை கலந்துரையாட உள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அமெச்சூர் ரேடியோ திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்னதாக விண்வெளியில் இருக்கும் சுக்லா உடன் காணொளியில் உரையாடிய பிரதமர் மோடி, சுபான்ஷூ வெகு தொலைவில் இருந்தாலும் இந்தியர்களின் இதயத்திற்கு அவருடன் நெருக்கமாக இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 04, 2025 10:12 AM IST