இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா என்பது தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி மே 30ஆம் திகதி வருவதால், முன்னதாக மே 2ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெசாக் தினத்துக்கு மறுநாளான மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும், அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

