• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விடிந்தால் பணிநீக்கம்.. ஐடி நிறுவனங்களில் 1.2 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற என்ன காரணம்? 2020-ல் உருவான பிரச்சனை! | 120,000 tech jobs lost in 2026 amid the race to invest in AI

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விடிந்தால் பணிநீக்கம்.. ஐடி நிறுவனங்களில் 1.2 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற என்ன காரணம்? 2020-ல் உருவான பிரச்சனை! | 120,000 tech jobs lost in 2026 amid the race to invest in AI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விடிந்தால் பணிநீக்கம்.. ஐடி நிறுவனங்களில் 1.2 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற என்ன காரணம்? 2020-ல் உருவான பிரச்சனை!

உலகளவில் IT மற்றும் டெக் நிறுவனங்கள் சில காலமாகவே அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இது குறித்த செய்திகள் இத்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்களை மட்டுமல்ல.. மாணவர்களையும் பயமுறுத்தி வருகிறது.

அதற்கு உதாரணமாய் அமைந்தது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லே-யாஃப் செய்தி. மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் சுமார் 4800 வேலையை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

தற்போதைய பணிநீக்க நடைமுறையில் இருக்கும் மிக கசப்பான உண்மை என்ன தெரியுமா? பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் நிதி நெருக்கடி காரணமாகவோ, ஊழியர்களுக்கு சம்பள கொடுக்க முடியாத காரணத்திற்காகவோ இந்த பணிநீக்க நடவடிக்கையை எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துவிட்டு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றன.

விடிந்தால் பணிநீக்கம்.. ஐடி நிறுவனங்களில் 1.2 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற என்ன காரணம்? 2020-ல் உருவான பிரச்சனை!

அதோடு பணிநீக்கம் செய்யும் பல நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்கும் சரி, ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கும் சரி, ஒரே ஒரு காரணத்தை தான் குறிப்பிடுகின்றன அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

Layoffs.fyi என்ற இணையதளம் தினசரி அடிப்படையில் உலகளவில் டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் செய்யும் பணி நீக்கம் குறித்த தகவல்களை வெளியிடுகிறது. இத்தளத்தின் தகவவ் படி 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 1,20,000 ஐடி ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது ஐடி நிறுவனங்கள் கண்களை முடிக்கொண்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அள்ளி கொடுத்து, ஊழியர்களை பணியமத்தின. அப்போது அதிகரித்த ஊழியர்கள் எண்ணிக்கை மூலம் உருவான பிரச்சனை, ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஸ்வரூபம் எடுத்து தற்போது அதிகப்படியான மக்கள் வேலை இழந்துள்ளனர். எனவே எல்லா பழியையும் AI மீது மட்டுமே போட்டு விட முடியாது. ஆனால் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு பலி போடக் கிடைத்த காரணமாகவும் AI மாறியிருக்கிறது.

2026 ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்த நிறுவனங்களின் லிஸ்ட்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் 4800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆரக்கள் நிறுவனம் ஜூன் 22-ஆம் தேதி அன்று 21,000 ஊழியர்களை ரகசியமாக வீட்டிற்கு அனுப்பியது.

தற்போதைய சூழலில் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள் தாங்களே AI தான் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றன. அதேபோல கிட்லேப் நிறுவனம் 350 ஊழியர்களை குறைத்தது. இன்ட்யூட், மெட்டா மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்கள் சுமார் 14,000 ஊழியர்களை குறைத்துள்ளது.

இதில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் ஐபிஎம் நிறுவனம் 9000 ஊழியர்களையும், டெல் நிறுவனம் தங்கள் ஒட்டுமொத்த பணியாளர்களில் 11,000 ஊழியர்களையும் குறைத்தது. ஒரு சில நிறுவனங்கள் ஆரம்ப நிலை வேலைகளுக்கு ஊழியர்களை பணியமர்த்தாமல் AI கொண்டு செய்ய முடியுமா என்றும் பரிசீலித்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஊழியர்களுக்கு நிகரான AI ஏஜென்ட்களை பயன்படுத்த விருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஒருபுறம் தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மாற்றங்கள் நன்மை அளிப்பதாக பார்க்கப்பட்டாலும்.. ஐடி ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் தங்களுடைய வருடாந்திர வருமானத்தை அதிகரித்ததற்கு பெரும் பங்கு AI தொழில்நுட்பத்திற்கு இருப்பதாக கூறியுள்ளன. எனவே இனிவரும் காலங்களில் ஊழியர்களும் AI திறன்களை அதிகரித்துக் கொள்வதை தவிர வேறு ஆப்ஷனே இல்லை.

Share This Article

Story first published: Wednesday, July 8, 2026, 14:23 [IST]

Other articles published on Jul 8, 2026

Read More

Previous Post

இதுதான் மெஸ்ஸிக்கு கிடைத்த வரம்.. இந்த விஷயத்தில் ரொனால்டோ ரொம்ப பாவம்.. ஏன் தெரியுமா? | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Cries Alone While Lionel Messi Celebrates with a Nation, Leaving CR7 Fans Envious

Next Post

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை | Makkal Osai

Next Post
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை | Makkal Osai

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin