Last Updated:
பிசிசிஐ மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் களம் இறங்கிய விராட் கோலி முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ஆந்திரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
இந்த தொடரில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் 299 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஆர்பித் ரானா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்த இணைந்த பிரியன்ஷ் ஆர்யா மற்றும் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் சேர்த்தனர். பிரியன்ஷ் ஆர்யா 44 பந்துகளில் 5 சிக்சர் 7 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதம் அடித்து 101 பந்துகளில் 131ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 37. 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களைக் கடந்த 2-வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். சச்சின் இந்த 16,000 ரன்களை எட்ட 391 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். ஆனால், கோலி வெறும் 330 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
பிசிசிஐ மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. மேலும், வரும் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக போதிய பயிற்சி பெறும் நோக்கில் கோலி மற்றும் ரோகித் சர்மா (இருவரும் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
Dec 24, 2025 10:00 PM IST


