Last Updated:
நீண்ட நாட்களாகக் காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தனது உடல் தகுதியையும் ஃபார்மையும் நிரூபிக்கும் வகையில் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஒரே ஓவரில் 5 சிக்சருடன் 34 ரன்கள் குவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஒரு அதிரடியான சாதனையைப் படைத்துள்ளார்.
பரோடா அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது களம் புகுந்த ஹர்திக், ஆரம்பம் முதலே பந்துகளைச் சிதறடித்தார். குறிப்பாக, போட்டியின் 39-வது ஓவரில் விதர்பா சுழற்பந்து வீச்சாளர் பார்த் ரேகாடே வீசிய பந்துகளை எதிர்கொண்ட அவர், முதல் 5 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு மைதானத்தை அதிரவைத்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி விளாசியதன் மூலம், ஒரே ஓவரில் மொத்தம் 34 ரன்களைக் குவித்து (6,6,6,6,6,4) தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா, வெறும் 92 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் மொத்தம் 133 ரன்களைக் குவித்தார். இந்த அபாரமான சதத்தின் மூலம், சரிவிலிருந்த பரோடா அணியை 50 ஓவர்களில் 293 ரன்கள் என்ற கௌரவமான நிலைக்கு அவர் கொண்டு சென்றார்.
Jan 03, 2026 10:36 PM IST


