Last Updated:
பாஜக தலைவர் குஷ்பு, இன்று புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய் மனதில் பாஜக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை போல் புதுச்சேரியில் தவெக தனித்து தேர்தலை சந்திக்கிறது.
இதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று அங்கு பரப்புரை மேற்கொண்டார். அதன்படி மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமுவும், பாஜக சார்பில் செல்வமும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அந்தத் தொகுதியில் ராமுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்கள்” என பேசினார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய குஷ்பு, “விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரை பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுவை பிரச்சாரத்தின் போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை குறிப்பிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
Puducherry (Pondicherry)


