Last Updated:
USA Visa | விசா பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.
விசா கோரி விண்ணப்பிப்போர், தங்களது சமூக வலைதளப் பக்கங்களை அனைவரும் பார்க்கும் வகையில் ‘Public’ என மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, விசா வழங்குவதிலும் தொடர்ந்து பல கெடுபிடிகளை விதித்து வருகிறது.
அந்த வரிசையில், F, M மாணவர் விசாக்கள், J வகை மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற விசாவிற்கு விண்ணப்பிக்கும் தனிநபர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களை ‘Private’ என இருந்தால், அதை ‘Public’ என மாற்ற வேண்டும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள செயல்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் விண்ணப்பதாரரின் பதிவுகள், புகைப்படங்கள், போலியான தகவல்களைப் பரப்பும் செயல்பாடுகள் ஆகியவை விசா வழங்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
June 24, 2025 7:38 AM IST


