விசாவைப் பெறுவதற்காக மலேசியாவின் வயதான ஆண்களுக்கு வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்துவரும் ஒரு கும்பல் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கும்பல் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும், வயதான ஆண்களை இலக்காகக் கொண்டு, வெளிநாட்டு பெண்களை மனைவியாக நடித்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்பவர்களாக இருந்துள்ளனர். ஒரு திருமணப் பதிவுக்கு RM50 முதல் RM500 வரை வசூலித்து வந்ததாககுடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷபான் தெரிவித்துள்ளார்.
ஜூலை 3ம் தேதி நடைபெற்ற ரெய்டில், 30 முதல் 66 வயதுக்குட்பட்ட ஐந்து மலேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது மலேசியா, சீனா,வங்களாதேஷ்,இந்தோனேசியா, வியட்நாம்,மியான்மார் பாஸ்போர்ட்டுகள் 63 கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குடிவரவு மற்றும் தேசிய பதிவுத்துறையை சேர்ந்த ஆவணங்கள் அடங்கிய 26 கோப்புகள்,2 கார்கள், மற்றும் பல கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தவறான முறையில் பாஸ்போர்ட் வைத்திருப்பதற்காக விசாரணையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்