கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த துறவிகள், குறித்த இடத்தை விட்டு வெளியேறுமாறு நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி அல்லது திருத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரலொம இன்று (23) நிராகரித்துள்ளார்.
அதேவேளை, கணக்காய்வாளர் நாயகத்தின் (Attorney General) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட தனியான கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.
மேலும், நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


