விகாரமஹாதேவி பூங்காவிற்கு கூரிய கத்திகளுடன் வருகை தந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் பிக்குமார் குழுவொன்று சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொண்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று (21-10-2026) கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவில் இடம்பெற்றது.
கூரிய கத்திகள்
அந்த இடத்திற்கு இரண்டு கூரிய கத்திகளுடன் நபரொருவர் வருகை தந்துள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட தேரர்கள் குறித்த நபரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரைக் கைதுசெய்த குருந்துவத்தை காவல்துறையினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

