• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது

கொழும்பு – விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் 58 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்ப்பாட்ட களப் பகுதியில், கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி இரவு கொழும்பு தெற்கு வலய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியுடன் இணைந்து செயற்பட்டதோடு, ஆர்ப்பாட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஏதேனும் குற்றச் செயலை அரங்கேற்றும் நோக்குடன் இந்த ஆர்ப்பாட்ட களத்தில் தங்கியிருந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கடந்த 22ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார் – டிரம்ப்… | Makkal Osai

Next Post

குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இதுல இருக்கா? – Sri Lanka Tamil News

Next Post
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இதுல இருக்கா? – Sri Lanka Tamil News

குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இதுல இருக்கா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin