விஎச்பி மாநாட்டில் நீதிபதி கலந்துகொண்டு பேசியது பற்றிய விவரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக அறையில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) அமைப்பின் சட்டப்பிரிவு மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி யாதவ் கூட்டத்தில் பேசுகையில், ‘இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

