இந்த பூமிப்பந்து முழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும், தமிழர் என்ற நம்முடைய அடையாளத்தை விடாதீர்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள்; தமிழை மறக்காதீர்கள்; தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள்! ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தைப் பாருங்கள். நம்முடைய பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் உலகம் என்று ஏராளமான இடங்கள் இருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் உறவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கிறேன். குடும்பத்துடன் இங்கே வந்து, இந்த மறக்க முடியாத வரவேற்பை கொடுத்திருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் நன்றி,’’

