• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம் டிரம்ப் வைத்த கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம் டிரம்ப் வைத்த கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 28, 2025 7:40 AM IST

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசினார். சர்வதேச அமைதி, பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர். தொழில்நுட்பம், வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விவாதித்தனர்.

modi trump

உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்றதற்காக டொனால்டு டிரம்புக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பரம் பலன் அளிக்கும் வகையில் செயல்படவும், நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருக்கவும் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் சூழல் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டதாகவும், சர்வதேச அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், விரைவில் சந்தித்துப் பேசவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் டிரம்ப் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, பிரதமர் மோடியுடன் பயனுள்ள பேச்சுவார்த்தையை டிரம்ப் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் பேசியதாகவும், இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு சூழல் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று 3 சிறுமிகளுக்கு வன்கொடுமை.. சென்னையில் பகீர் சம்பவம்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்த டிரம்ப், இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

January 28, 2025 7:37 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம் டிரம்ப் வைத்த கோரிக்கை – வெள்ளை மாளிகையின் புதிய விருப்பம்!

Read More

Previous Post

முழுமையாக விலகிய வடகிழக்கு பருவமழை! ஜன.30-31 வரை தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Next Post

Kes Teoh Beng Hock, Polis akan panggil semula saksi – Shuhaily | Makkal Osai

Next Post
Kes Teoh Beng Hock, Polis akan panggil semula saksi – Shuhaily | Makkal Osai

Kes Teoh Beng Hock, Polis akan panggil semula saksi - Shuhaily | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin