கடந்த நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
சென்னையில் நேற்று 8ஆம் திகதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 9 ஆம் திகதி கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.46,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ஒரு கிராம் ரூ.4,722-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.416 குறைந்து ஒரு சவரன் ரூ.37,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

