ஆனால், இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தில் சிறிய தளர்வு தென்பட்டது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-ஆகவும், செவ்வாய்க்கிழமை மேலும் ரூ.640 குறைந்து ரூ.74,360-ஆகவும் விலை சரிந்தது. புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320 எனவும், வியாழக்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனையானது. நேற்று மீண்டும் ரூ.80 குறைந்து ரூ.74,240-க்கு விலை சரிந்தது.


