அதிமுகவை விமர்சிக்க தடை
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், இரு கட்சிகளின் தொண்டர்களும் நிர்வாகிகளும் இணைந்து திமுகவிற்கு எதிராக கருத்துகளை பதிவிட வேண்டும் என்று நயினார் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், சில பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் இடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டறிந்து, அத்தகைய கணக்குகளை சுட்டிக்காட்டி, நயினார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

