ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கான பினான்சியல் சொல்யூஷன் பிளாட்பார்மானது, இந்தியாவில் கேப் டிரைவர்கள் எதிர்கொள்ளும் நிதி ரீதியிலான சவால்கள் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மூன்று நகரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கேப் டிரைவர்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இதில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் கேப் டிரைவர்கள் ஒவ்வொரு வாரமும் 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தபோதிலும் நிதி நெருக்கடியை சந்திப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும், நிதிப் பாதுகாப்பின்மை மற்றும் கடுமையான வேலை ஆகியவற்றின் காரணமாக மோசமான உடல் மற்றும் மன நலம், வேலை பாதுகாப்பின்மை மற்றும் கடன் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது என்பதையும் அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
உடல்நலப் பிரச்சனைகள்
60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுநர்கள் அதிக வேலை காரணமாக உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக கூறி உள்ளனர். அதே நேரத்தில் 50% பேர் தங்கள் குடும்பங்களை நிதிரீதியாக சமாளிக்க போராடுவதாக கூறியுள்ளனர், எனவே இது கடன் மற்றும் உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. கார்களின் அதிகபடியான சப்ளை காரணமாக பெருநகரங்களில் இயங்கும் வாகன ஓட்டுநர்கள் நிதிச் சுமையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர், மேலும் அவர்களின் ஊதியம் குறைந்தது.
முக்கால்வாசி அதாவது 75 சதவீத கேப் டிரைவர்கள், தாங்கள் இணைந்து பணியாற்றும் பிளாட்ஃபார்ம் நிறுவனங்களால் சுரண்டப்பட்டதாக உணர்கிறார்கள். அதாவது, டிரை ரன், லாங் பிக்-அப்ஸ், போக்குவரத்து தாமதங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்தல் ஆகியவை ஓட்டுநர்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிப்பதில் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
கடந்த ஆண்டில் 20% அதிகரித்த எரிபொருள் விலைகள், அதிக வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் அதிக பிளாட்ஃபார்ம் கமிஷன்கள் (30% வரை) ஆகியவற்றால், கேப் டிரைவர்களின் நிகர வருவாய் கடுமையாகக் குறைந்துள்ளது. சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் குரானா கூறியதாவது, வண்டி ஓட்டுதல் போன்ற வேலைகள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்த வளர்ச்சியானது வாகன ஓட்டுநர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிக்க:
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் இந்த சலுகை கிடைக்கும்… பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
மேலும், இந்த அறிக்கையின் மூலம், இந்தியாவில் உள்ள வண்டி ஓட்டுநர்களைப் பாதிக்கும் பல்வேறு வேலை தொடர்பான சிக்கல்களின் ஆழத்தை சுட்டிக்காட்ட விரும்பினோம், அத்துடன் அவற்றை நிவர்த்தி செய்ய உதவும் பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறோம். தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பவர்கள் உட்பட அனைவரும் இந்த முக்கியமான பரிந்துரைகளை பரிசீலித்து, கேப் டிரைவர்களுக்கு நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் குரானா கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
