யாழ்தேவி தொடருந்தானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை
புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன்
துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளது.
இச்சேவையானது எதிர்வரும் (11.05.2026) திங்கட்கிழமையிலிருந்து
ஆரம்பிக்கப்படவுள்ளது.
சாதாரண கட்டணங்கள்
குறித்த தினங்களில் கொழும்பிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு வவுனியாவை
11.36 மணிக்கு கிளிநொச்சி நகரத்தை 12.51 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 1.59
மணிக்கும் வந்தடையும். தொடருந்து இறுதியாக 2.33 மணிக்கு காங்கேயன் துறையை
சென்றடையும்.

அவ்வாறே எதிர்வரும் செவ்வாய்க் கிழமையிலிருந்து (12.05.2026) திகதியிலிருந்து
காங்கேசன் துறையில் ஆரம்பிக்கும் தொடருந்து சேவையானது யாழ்ப்பாணத்தில் 11.00
மணிக்கும் கிளிநொச்சியில் 12.14 மணிக்கும் வவுனியாவில் 1.35 மணிக்கும்
சென்றடைந்து இறுதியாக கொழும்பு கோட்டையை 07.03 மணிக்கு சென்றடையும்.
இந்த தொடருந்துக்கான கட்டடங்கள் சாதாரண கட்டணங்களாகவே அறவிடப்படவுள்ளன.
இவற்றைத் தவிர வழமை போன்று முதலாம் இரண்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கான ஆசனங்களை
முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என யாழ்ப்பாண பிரதான
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி
தி. பிரதீபன் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

