வாட்ஸ்அப் மூலம் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். கிளியர் டேக்ஸ் என்ற நிறுவனம் இந்த வசதியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிளியர் டேக்ஸின் நிறுவனர் மற்றும் CEO அர்ச்சித் குப்தா கூறுகையில், “நாங்கள் வருமான வரி தாக்கல் செய்வதை எளிமையாக்கவில்லை, நிதி அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துகிறோம். வாட்ஸ் அப்பில் இந்த சேவையை கொண்டுவருவதன் மூலம், தொழில்நுட்பத் தடைகளை நீக்கியுள்ளோம், இதன் மூலம் மில்லியன் கணக்கான கடின உழைப்பாளிகள் தங்கள் தொலைபேசிகளில் ஒரு சில டச்கள் மூலம் தங்கள் உரிமையைத் திரும்பப் பெற முடியும். இந்த சேவை பெரும்பாலான குறைந்த வருமான வரி செலுத்துபவர்களான ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை பயன்படுத்தும் நபர்களுக்கு உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
ஐடிஆர்-1 படிவம்:
ரூ.50 லட்சம் வரையிலான வருமானம் உள்ள ஒரு சாதாரண குடியுரிமை தனிநபர் இதை தாக்கல் செய்யலாம். இதில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், ஒரே ஒரு வீட்டுச் சொத்தின் உரிமையுடன் சம்பளம் வாங்கும் நபர் அல்லது வங்கிக் கணக்கிலிருந்து வட்டி போன்ற பிற ஆதாரங்களில் (பந்தயம், சூதாட்டம் மற்றும் லாட்டரிகளைத் தவிர்த்து) இருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை நீங்கள் கணக்கில் காட்டப்பட வேண்டும்.
ஐடிஆர்-4 படிவம்:
சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF நிறுவனங்களும் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க:
வங்கி வாடிக்கையாளர்களே அலெர்ட்… உங்க அக்கவுண்ட்டில் இருந்து மாயமாகும் ரூ.295… ஏன் தெரியுமா?
வாட்ஸ்அப்பில் உங்கள் ஐடிஆர்-ஐ பதிவு செய்வது எப்படி?:
1. கிளியர் டேக்ஸின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் தொடங்கவும்.
2. பொருத்தமான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போதைக்கு, இந்த சேவை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4-ஐ மட்டுமே ஆதரிக்கிறது. மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாகவும், விவசாய வருமானம் ரூ.5,000 வரை மற்றும் ஒரே ஒரு வீட்டுச் சொத்தின் உரிமையுடனும் சம்பளம் வாங்கும் நபராக இருந்தால் மட்டுமே இந்த படிவம் பொருந்தும்.
3. வரி செலுத்துவோர் படங்கள், ஆடியோ அல்லது உரை மூலம் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட விவரங்கள், வருமான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் இதில் அடங்கும். வாட்ஸ்அப் மூலம் பாதுகாப்பான முறையில் பணத்தை செலுத்தலாம்.
இதையும் படிக்க:
ஓய்வு காலத்தையும் சொர்க்கமாக மாற்றித் தரும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம்!
10 மொழிகளில் வாட்ஸ்அப் ஐடிஆர் தாக்கல் சேவை:
வாட்ஸ்அப் ஐடிஆர் தாக்கல் செய்யும் சேவையானது ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இருந்து, உங்களுக்கு தெரிந்த மொழியைத் தேர்வு செய்யவும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
