Last Updated:
பிரபல பில்லியனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான டில்மேன் ஃபெர்டிட்டா அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகவும் நெருங்கிய நண்பராவார். மேலும், இவர் என்பிஏ ஹூஸ்டன் ராக்கெட்ஸ் என்கிற கூடைப்பந்து அணியையும் சொந்தமாக வைத்துள்ளார்.
உலகின் பணக்கார உணவக உரிமையாளரும், 600க்கும் மேற்பட்ட சொத்துகள், கூடைப்பந்து அணி ஆகியவற்றின் சொந்தக்காரரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பருமான டில்மேன் ஃபெர்டிட்டா பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிரபல பில்லியனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான டில்மேன் ஃபெர்டிட்டா அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகவும் நெருங்கிய நண்பராவார். மேலும், இவர் என்பிஏ ஹூஸ்டன் ராக்கெட்ஸ் என்கிற கூடைப்பந்து அணியையும் சொந்தமாக வைத்துள்ளார்.
கடந்த 2015இல் இவரது சொத்து மதிப்பு £1.9 பில்லியன் யூரோவாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2025இல் நம்பமுடியாத அளவில் £8.5 பில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் சேவை துறையில் முன்னிலை வகிக்கும் 67 வயதான இவருக்கு, அமெரிக்காவின் 36 மாநிலங்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் 600க்கும் மேற்பட்ட சொத்துகள் உள்ளன. உலகளவில் அவரது நிறுவனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஃபெர்டிட்டா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரும் ஆவார். டிரம்ப், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், ஃபெர்டிட்டாவை ஒரு சாதனை மிக்க தொழிலதிபர் மற்றும் மக்களுக்கு உதவும் மனப்பக்குவம் கொண்டவர் என்று பாராட்டி இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, ஃபெர்டிட்டா லாஸ் வேகாஸ் கேசினோ துறையிலும் ஆதிக்கம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் அவர், ஆடம்பர ஹோட்டல் மற்றும் கேசினோவை நிர்வகித்துவரும் வின் ரெசார்ட்ஸின் மிகப்பெரிய மற்றும் முக்கிய பங்குதாரராக மாறி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் 10%க்கும் அதிகமான பங்குகளை சமீபத்தில் வாங்கியதன் மூலம், அதன் இணை நிறுவனரான எலைன் வின்னை பின்னுக்குத் தள்ளி அதிக பங்குகளைக் கொண்ட நபராக உருவெடுத்துள்ளார்.
டெக்சாஸின் கால்வெஸ்டனில் பிறந்த ஃபெர்டிட்டா, ஒரு மீன் உணவகத்தை வைத்திருந்த அவரது தந்தையின் மூலம் ஈர்க்கப்பட்டு, இந்த துறையில் காலடி எடுத்து வைத்தார். வாடிக்கையாளர் சேவைத் துறையில் அவருக்கு இருந்த அதீத ஆர்வம், லாண்ட்ரிஸ் சீ ஃபுட் ஹவுஸ், மாஸ்ட்ரோஸ், மோர்டனின் தி ஸ்டீக்ஹவுஸ் மற்றும் பப்பா கம்ப் ஷ்ரிம்ப் கோ போன்ற பிரபல உணவக பிராண்டுகளின் மூலம் ஃபெர்டிட்டா என்டர்டெயின்மென்ட்டின் கீழ் ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க வழிவகுத்தது.
இதையும் படிக்க: இந்தியாவில் எந்த மாநில மக்கள் அதிக தங்கம் வைத்துள்ளனர் தெரியுமா? – தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!
“ஷட் அப் அண்ட் லிஸ்டன்!” என்ற தனது புத்தகத்தில், ஃபெர்டிட்டா தனது தொழில் வாழ்க்கையின் முக்கிய பாடங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அதில் வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். அவர் அதில், “வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் எளிமையானது – நீங்கள் ஒரு வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுகிறீர்கள்? அவர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள்? மற்றும் அவர்கள் நெகிழ்வாக இருக்க என்ன செய்கிறீர்கள்? என்பதைப் பொறுத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
March 11, 2025 2:50 PM IST
வாடிக்கையாளர் சேவையில் நன்கு அறியப்பட்ட நபர்… 600க்கும் மேற்பட்ட சொத்துக்களின் உரிமையாளர் – யார் இந்த டில்மேன்?